Search This Blog

Wednesday, November 14, 2018

பத்துப்பாட்டு நூல்கள் - Pathupattu Noolgal

பத்துப்பாட்டு நூல்கள் 
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

நூல்கள்                                           ஆசிரியர் பெயர்கள் 
1.திருமுருகாற்றுப்படை       - நக்கீரர்
2.பொருநராற்றுப்படை           - முடத்தாமக் கண்ணியார்
3.சிறுபாணாற்றுப்படை          - நத்தத்தனார்
4.பெரும்பாணாற்றுப்படை   - கடியலூர் உருத்திரங்கண்ணனார் 5.முல்லைப்பாட்டு                   - நப்பூதனார்
6.மதுரைக் காஞ்சி                    - மாங்குடி மருதனார்
7.நெடுநல்வாடை                     - நக்கீரர்
8.குறிஞ்சிப் பாட்டு                    - கபிலர்
 9.பட்டினப் பாலை                   - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
 10.மலைபடுகடாம்                 - பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

வேறு பெயர்கள் 
திருமுருகாற்றுப்படை       - புலவராற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை   - பாணறு
முல்லைப்பாட்டு                  - பெருங்குறிச்சி
பட்டினப்பாலை                     - வஞ்சிநெடும்பட்டு
மலைபடுகடாம்                    - கூத்தராற்றுப்படை

 பத்துப்பாட்டில் அக நூல்கள் 3.
முல்லைபாட்டு, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை.
பத்துப்பாட்டில் புறநூல்கள் 6.
திருமுருகாற்றுப்படை,பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, மலைபடுகடாம்
பத்துப்பாட்டில் அகமா, புறமா என்ற கருத்து வேறுபாட்டைத் தோற்றுவித்த நூல் ஒன்று நெடுநல்வாடை
ஆற்றுப்படை நூல்கள் 5 , ஆற்றுப்படை என்று பெயர்பெற்ற நூல்கள் 4. பத்துப்பாட்டில் சிறிய நூல் முல்லைபாட்டு (103 அடி)
பத்துப்பாட்டில் பெரிய நூல் மதுரை காஞ்சி (782 அடி)

7 comments: