Search This Blog

Tuesday, November 13, 2018

எட்டுத்தொகை நூல்கள்


எட்டுத்தொகை நூல்கள்

நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூ(று)
ஒத்த பதிற்றுப்பத்(து) ஓங்கு பரிபாடல்,
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு), அகம்,புறம்என்(று)
இத்திறத்த எட்டுத் தொகை.   
1.   நற்றிணை 2.   குறுந்தொகை 3.   ஐங்குறுநூறு 4.   பதிற்றுப்பத்து              5.   பரிபாடல்  6.   கலித்தொகை 7.   அகநானூறு 8.   புறநானூறு

அகப்பொருள் பற்றியவை: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.

புறப்பொருள் பற்றியவை : புறநானூறு, பதிற்றுப்பத்து.
அகமும் புறமும் கலந்து வருவது:பரிபாடல்.

எட்டுத்தொகையுள் காலத்தால் முந்தியது புறநானுறு

எட்டுத்தொகையுள் காலத்தால் பிந்திய நூல்கள் கலித்தொகையும், பரிபாடலும் ஆகும்.

எட்டுத்தொகையுள் பாடலால் பெயர் பெற்ற நூல்கள் இரண்டு கலித்தொகை (கலிப்பா), பரிபாடல் (பரிபாட்டு)..


No comments:

Post a Comment