Search This Blog

Tuesday, November 20, 2018

TNPSC TAMIL - Agananuru அகநானூறு

அகநானூறு 


  • வேறு பெயர்கள் – அகப்பாட்டு, நெடுந்தொகை, பெருந்தொகை, அகம் 
  • கடவுள் வாழ்த்துப் பாடல் – சிவன் பற்றியது 
  • கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் 
  • தொகுத்தவர் – உருத்திர சன்மனார் 
  • தொகுப்பித்தவர் – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி 
  • பாடிய புலவர்கள் – 145 
  • அடி எல்லை – 13 அடி சிறுமை 31 அடி பெருமை 


  பிரிவுகள் – 3 


  • களிற்றியானை நிரை – 120 பாடல்கள் (1 – 120) 
  • மணிமிடை பவளம் – 180 பாடல்கள் (121 – 300) 
  • நித்திலக் கோவை - 100 பாடல்கள் (301 – 400) 


  பாடலின் வரிசை அமைப்பு 

 ஓர் ஒழுங்கு முறையில் தொகுக்கப்பட்ட ஒரே தொகை நூல் அகநானுறு.

  • 1, 3, 5, 7... ஒற்றைப்படை – பாலை – 200 பாடல்கள் 
  • 2, 8, 12, 18... இரண்டு, எட்டு – குறிஞ்சி - 80 பாடல்கள் 
  • 4, 14, 24… நான்கு – முல்லை – 40 பாடல்கள் 
  • 6, 16, 26... ஆறு – மருதம் – 40 பாடல்கள் 
  • 10, 20, 30... பத்து – நெய்தல் – 40 பாடல்கள் 


  பிற குறிப்புகள் 


  • வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாக கூறும் அகநூல் அகநானுறு
  • வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாக கூறும் புலவர்கள் பரணர், மாமூலர்.
  • பண்டைத் தமிழர் திருமணம் குறித்து கூறும் நூல் (86, 136) அகநானுறு. 
  • முதல் பதிப்பாசிரியர் – பே.ராஜகோபாலாச்சாரியார் (முதல் 70 பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார்).
  • பிற்காலத்தில் ந.மு. வேங்கடசாமி நாட்டர் மற்றும் கரந்தை கவியரசு ரா.வெங்கடாசலம் இருவரும் நூல் முழுமைக்கும் உரை எழுதியுள்ளனர்.

No comments:

Post a Comment