Search This Blog

Monday, June 3, 2019

purananuru புறநானுறு


புறநானுறு

·         வேறு பெயர்கள் – புறப்பாட்டு, புறம், வரலாறுக் களஞ்சியம்
·         கடவுள் வாழ்த்துப் பாடல் – சிவன் பற்றியது
·         கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
·         தொகுத்தவர் – தெரியவில்லை
·         தொகுப்பித்தவர் – தெரியவில்லை
·         பாடிய புலவர்கள் – 158
                           பிற குறிப்புகள்

·         புறப்பொருள் பற்றி 400 அகவற்பா கொண்ட தொகுப்பு
·        அடி எல்லை-4 அடி சிறுமை 40 அடி பெறுமை
·        15 பாண்டியர்களையும்,18 சேரர்கள்,18 சோழர்களையும்,18
வேளிர்களை பற்றியும் புறநானுறு பேசுகிறது
·   நளியிரு முன்னிர் நாவாய் ஓட்டியவன் கரிகாலன் என்று புறப்பாடல்கள் கூறுகிறது.
·         தமிழில் தோன்றிய 2-வது திருக்குறள் புறநானுறு.
·         நெடுஞ்செழியன் போர் புரிந்த இடம் தலையலங்கானம்.
·         பல்யானை செங்கெழு குட்டுவன் உம்பர் காடு.
·         சோழர்கள் மொளரியர்களை தோற்கடித்த இடம் வல்லம்.
மன்னர்கள்
வேறுபெயர்கள்
பூ
கொடி
தலைநகரம்
துறைமுகம்
சேரன்
குட்டுவன்,கடுங்கோ
வானவன்
பனம்பூ
(போந்தை)
வில்
வஞ்சி
முசிறி,
தொண்டி
சோழன்
வளவன், கிள்ளி,
செம்பியன்
அத்தி பூ
(ஆர்)
புலி
உறையூர்
புகார்
பாண்டியன்
செழியன், மாறன்,
வழுதி, மீனவன்
வேம்பு
மீன்
மதுரை
கொற்கை

Tuesday, November 20, 2018

TNPSC TAMIL - Agananuru அகநானூறு

அகநானூறு 


  • வேறு பெயர்கள் – அகப்பாட்டு, நெடுந்தொகை, பெருந்தொகை, அகம் 
  • கடவுள் வாழ்த்துப் பாடல் – சிவன் பற்றியது 
  • கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் 
  • தொகுத்தவர் – உருத்திர சன்மனார் 
  • தொகுப்பித்தவர் – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி 
  • பாடிய புலவர்கள் – 145 
  • அடி எல்லை – 13 அடி சிறுமை 31 அடி பெருமை 


  பிரிவுகள் – 3 


  • களிற்றியானை நிரை – 120 பாடல்கள் (1 – 120) 
  • மணிமிடை பவளம் – 180 பாடல்கள் (121 – 300) 
  • நித்திலக் கோவை - 100 பாடல்கள் (301 – 400) 


  பாடலின் வரிசை அமைப்பு 

 ஓர் ஒழுங்கு முறையில் தொகுக்கப்பட்ட ஒரே தொகை நூல் அகநானுறு.

  • 1, 3, 5, 7... ஒற்றைப்படை – பாலை – 200 பாடல்கள் 
  • 2, 8, 12, 18... இரண்டு, எட்டு – குறிஞ்சி - 80 பாடல்கள் 
  • 4, 14, 24… நான்கு – முல்லை – 40 பாடல்கள் 
  • 6, 16, 26... ஆறு – மருதம் – 40 பாடல்கள் 
  • 10, 20, 30... பத்து – நெய்தல் – 40 பாடல்கள் 


  பிற குறிப்புகள் 


  • வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாக கூறும் அகநூல் அகநானுறு
  • வரலாற்றுச் செய்திகளை மிக அதிகமாக கூறும் புலவர்கள் பரணர், மாமூலர்.
  • பண்டைத் தமிழர் திருமணம் குறித்து கூறும் நூல் (86, 136) அகநானுறு. 
  • முதல் பதிப்பாசிரியர் – பே.ராஜகோபாலாச்சாரியார் (முதல் 70 பாடல்களுக்கு உரை எழுதியுள்ளார்).
  • பிற்காலத்தில் ந.மு. வேங்கடசாமி நாட்டர் மற்றும் கரந்தை கவியரசு ரா.வெங்கடாசலம் இருவரும் நூல் முழுமைக்கும் உரை எழுதியுள்ளனர்.

Thursday, November 15, 2018

Tnpsc tamil பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் -




பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

         பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சங்க மருவிய கால இலக்கியங்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், நீதிநூல்கள், அறநூல்கள் என்பன எல்லாம் ஒன்றே.
சங்க மருவிய காலம் கி.பி. 3 முதல் 6 – ஆம் நுற்றாண்டு வரை.
இதற்கு ‘இருண்ட கால இலக்கியம்’ என்ற பெயரும் உண்டு.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த வாய்பாட்டுப் பாடல்

"நாலடி, நான்மணி, நானாற்பது, ஐந்திணை,முப் 
பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம் 
இன்னிலைய, காஞ்சியுடன் ஏலாதி என்பவே 
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு." 

அறநூல்கள் - 11 

நூல்                                                                       ஆசிரியர்

 நாலடியார்                                              சமணமுனிவர்கள்
நான்மணிக்கடிகை                              விளம்பிநாகனார்
இன்னா நாற்பது                                    கபிலர்
இனியவை நாற்பது                             பூதஞ்சேந்தனார்
திரிகடுகம்                                                நல்லாதனார்
ஆசாரக்கோவை                                   பெருவாயின்முள்ளியார்
பழமொழி                                                 முன்றுரையரையனார்
சிறுபஞ்சமூலம்                                     காரியாசன்
ஏலாதி                                                        கணிமேதாவியர்
திருக்குறள்                                              திருவள்ளுவர்
முதுமொழிக்காஞ்சி                            கூடலூர் கிழார்

 புறநூல் -1

 களவழி நாற்பது                                   பொய்கையார்

 அகநூல் - 6 

 ஐந்திணை ஐம்பது                                                  மாறன் பொறையனார்
ஐந்திணை எழுபது                                                  மூவாதையார்
திணைமொழி ஐம்பது                                           கண்ணன் சேந்தனார்
கார் நாற்பது                                                               கண்ணன் கூத்தனார்
திணைமாலை நூற்றைம்பது                            கணிமேதாவியார்
ஐந்திணை அறுபது (அ) கைந்நிலை                புல்லங்காடனார்

Wednesday, November 14, 2018

பத்துப்பாட்டு நூல்கள் - Pathupattu Noolgal

பத்துப்பாட்டு நூல்கள் 
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய
கோல நெடுநல் வாடை கோல்குறிஞ்சிப்பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

நூல்கள்                                           ஆசிரியர் பெயர்கள் 
1.திருமுருகாற்றுப்படை       - நக்கீரர்
2.பொருநராற்றுப்படை           - முடத்தாமக் கண்ணியார்
3.சிறுபாணாற்றுப்படை          - நத்தத்தனார்
4.பெரும்பாணாற்றுப்படை   - கடியலூர் உருத்திரங்கண்ணனார் 5.முல்லைப்பாட்டு                   - நப்பூதனார்
6.மதுரைக் காஞ்சி                    - மாங்குடி மருதனார்
7.நெடுநல்வாடை                     - நக்கீரர்
8.குறிஞ்சிப் பாட்டு                    - கபிலர்
 9.பட்டினப் பாலை                   - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
 10.மலைபடுகடாம்                 - பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

வேறு பெயர்கள் 
திருமுருகாற்றுப்படை       - புலவராற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை   - பாணறு
முல்லைப்பாட்டு                  - பெருங்குறிச்சி
பட்டினப்பாலை                     - வஞ்சிநெடும்பட்டு
மலைபடுகடாம்                    - கூத்தராற்றுப்படை

 பத்துப்பாட்டில் அக நூல்கள் 3.
முல்லைபாட்டு, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை.
பத்துப்பாட்டில் புறநூல்கள் 6.
திருமுருகாற்றுப்படை,பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, மலைபடுகடாம்
பத்துப்பாட்டில் அகமா, புறமா என்ற கருத்து வேறுபாட்டைத் தோற்றுவித்த நூல் ஒன்று நெடுநல்வாடை
ஆற்றுப்படை நூல்கள் 5 , ஆற்றுப்படை என்று பெயர்பெற்ற நூல்கள் 4. பத்துப்பாட்டில் சிறிய நூல் முல்லைபாட்டு (103 அடி)
பத்துப்பாட்டில் பெரிய நூல் மதுரை காஞ்சி (782 அடி)

இந்திய அரசியலமைப்பு - முக்கிய கமிட்டிகள் Indian polity important committee in tamil

முக்கிய கமிட்டிகள் பற்றிய சில தகவல்கள்:-

  • மஹஜன் கமிட்டி - சக்கரை ஆலை தொழில்
  • R.V. குப்தா கமிட்டி - விவசாய கடன்
  • கான் கமிட்டி - நிதி நிறுவனங்கள் முன்னேற்றம்
  • சந்திரத்தா கமிட்டி - பங்கு சந்தை
  • UK ஷர்மா கமிட்டி - RRB செயல்பாடு, NABARD செயல்பாடு
  • அஜித்குமார் கமிட்டி - இராணுவத்திற்கான சம்பளம்
  • பிமல் ஜீல்கா கமிட்டி - ATCOS ன் செயல்பாடு பற்றி
  • C. பாபு ராஜீவ் கமிட்டி - கப்பல் துறையில் மாற்றங்கள்
  • S.L. கபூர் கமிட்டி - SSI ல் கடன் மற்றும் பண மாற்றம்
  • S.N. வர்மா கமிட்டி - வணிக வங்கிகள் மாற்றம்
  • Y.B. ரெட்டி கமிட்டி - வருமான வரியில் மாற்றம்
  • சப்தரிஷி கமிட்டி - உள்நாட்டு தேயிலை தொழில் முன்னேற்றம்
  • அபிஜித் சென் கமிட்டி - நீண்ட கால உணவுக் கொள்கை
  • கொல்கார் கமிட்டி - வரிவதிப்பு மாற்றங்கள்
  • கேல்கர் கமிட்டி - முதலாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்
  • மண்டல் கமிசன் - இரண்டாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்
  • B.G.கெர் ஆணையம் - அலுவலக மொழிகள்
  • நரசிம்மன் கமிட்டி - வங்கிச் சீர்த்திருத்தம்
  • ராஜா செல்லையா கமிட்டி - வரிச் சீர்திருத்தம்
  • P.V.ராஜ மன்னார் கமிட்டி - மத்திய மாநில உறவுகள்
  • சர்க்காரியா - மத்திய மாநில உறவுகள்
  • M.M.குன்சிங் - மத்திய மாநில உறவுகள் 
  • நாகநாதன் - மத்திய மாநில உறவுகள்
  • தினேஷ் கோஸ்வாமி - தேர்தல் சீர்திருத்தம்
  • M.N.வோரா - அரசியல் கிரிமினல்கள்
  • J.M.லிண்டோ - மாணவப்பருவ அரசியல்
  • B.M.கிர்பால் கமிட்டி - தேசிய வன ஆணையம்
  • மொராய்ஜி தேசாய் - முதல் நிர்வாகச் சீர்திருத்தம்
  • வீரப்ப மொய்லி - இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தம்
  • பல்வந்த்ராய் மேத்தா - மூன்றடுக்கு பஞ்சாயத்து
  • அசோக் மேத்தா - இரண்டடுக்கு பஞ்சாயத்து 
  • அனுமந்தராவ் - பஞ்சாயத்து 
  • G.M.D.ராவ் - பஞ்சாயத்து 
  • L.M.சிங்வி - பஞ்சாயத்து 
  • கோத்தாரி குழு - கல்வி சீர்திருத்தம் 
  • யஷ்வால் குழு - உயர்கல்வி 
  • பானு பிரதாப் சிங் - விவசாயம் 
  • மாதவ் காட்கில் - மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய
  • கஸ்தூரி ரங்கன் - மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய
  • சோலி சொராப்ஜி - காவல்துறை சீர்திருத்தம் 
  • பசல் அலி - மாநில மறுசீரமைப்பு ஆணையம் 
  • ராம்நந்தன் பிரசாத் - பாலேடு வகுப்பினர் 
  • S.பத்மநாபன் கமிட்டி - வணிக வங்கிகளின் நிலை 
  • ரகுராம் ராஜன் - நிதி நிறுவனங்களில் சீர்திருத்தம் 
  • G.T.நானாவதி - 1984 - சீக்கியக் கலவரம் 
  • நானாவதி மேத்தா கமிஷன் - கோத்ரா ரயில் 
  • பட்லர் கமிட்டி - இந்திய மாகாணம் குறையாட்சிக்கு உள்ள தொடர்பு 
  • முடிமன் கமிட்டி - இரட்டை ஆட்சி

Tuesday, November 13, 2018

எட்டுத்தொகை நூல்கள்


எட்டுத்தொகை நூல்கள்

நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூ(று)
ஒத்த பதிற்றுப்பத்(து) ஓங்கு பரிபாடல்,
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு), அகம்,புறம்என்(று)
இத்திறத்த எட்டுத் தொகை.   
1.   நற்றிணை 2.   குறுந்தொகை 3.   ஐங்குறுநூறு 4.   பதிற்றுப்பத்து              5.   பரிபாடல்  6.   கலித்தொகை 7.   அகநானூறு 8.   புறநானூறு

அகப்பொருள் பற்றியவை: நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு.

புறப்பொருள் பற்றியவை : புறநானூறு, பதிற்றுப்பத்து.
அகமும் புறமும் கலந்து வருவது:பரிபாடல்.

எட்டுத்தொகையுள் காலத்தால் முந்தியது புறநானுறு

எட்டுத்தொகையுள் காலத்தால் பிந்திய நூல்கள் கலித்தொகையும், பரிபாடலும் ஆகும்.

எட்டுத்தொகையுள் பாடலால் பெயர் பெற்ற நூல்கள் இரண்டு கலித்தொகை (கலிப்பா), பரிபாடல் (பரிபாட்டு)..